மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம ஜாலிதான்! நீச்சல் குளத்தில் மகன் மற்றும் மகளுடன் என்ஜாய் செய்யும் சினேகா!! வைரல் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா. இவரது நடிப்பில் வெளிவந்த ஆனந்தம், உன்னை நினைத்து, வசீகரா, புதுப்பேட்டை, வசூல்ராஜா, ஆட்டோகிராஃப் உள்ளிட்ட பல படங்கள் இன்றும் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. புன்னகை இளவரசி சினேகாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை சினேகா கடந்த 2013ஆம் ஆண்டு பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பின் சில காலங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த சினேகா தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய துணைகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை பதிவிடுவார். இந்த நிலையில் தற்போது சினேகா தனது மகன் மற்றும் மகளுடன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.