மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. வேறலெவல் லுக்.! கையில் கட்டுடன் அசத்தல் நடைபோட்ட ஐஸ்வர்யா ராய்.! எங்கு பார்த்தீங்களா??
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் 1997ஆம் ஆண்டு மணிரத்னம் பக்கத்தில் வெளிவந்த "இருவர்" படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் என பல மொழிப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் கடந்த 2007ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய்
இந்நிலையில் சினிமாவிற்கு இடைவெளிவிட்டிருந்த அவர் தற்போது மீண்டும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் அவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். நிகழ்ச்சியில் அவரது பிரத்யேகமான உடையை காணவே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பர்.
இதையும் படிங்க: வெளிவந்த சூப்பர் அப்டேட்.! முதன்முறையாக சூர்யாவுடன் ஜோடி சேரும் விஜய் பட நடிகை.! யார் பார்த்தீங்களா!!
கையில் கட்டுடன் அசத்தல் நடை
இந்த நிலையில் அவர் தற்போதும் மிகவும் வித்தியாசமான, தனித்துவமான உடையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளம் அலங்கரித்து நடை போட்டுள்ளார். அவர் கையில் கட்டுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே விமான நிலையத்தில் மகளுடன் வந்த ஐஸ்வர்யா ராய் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனை கண்ட ரசிகர்கள் என்னாச்சு? என பதறி போனர். தன் கையில் அடிபட்டிருந்தாலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதை மிஸ் செய்யக்கூடாது என ஐஸ்வர்யா ராய் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: "படங்களில் கவர்ச்சியாக நடிக்க எனக்கு விருப்பமில்லை" ஆனால் தனுஷ் கூட.. மனம் திறந்து பேசிய நடிகை தன்ஷிகா.!?