வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணத்தால் அவரது மகனின் தற்போதைய நிலை! மனம் வருந்தியுள்ள முதல் கணவர் ஆகாஷ்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரபலமானவர் வனிதா. அதனை தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். பின்னர் தனியாக யூடியூப் சானல் ஒன்றை தொடங்கி, மக்கள் மத்தியில் மேலும் பிரபலமான நடிகை வனிதா கடந்த மாதம் 27ம் தேதி இயக்குனர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் வனிதாவை மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வந்தனர்.
வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் தமிழில் சமுத்திரம், சொக்கத்தங்கம், தாமிரபரணி படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தநிலையில் மகன் விஜய் ஸ்ரீஹரி தந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவர் ஆகாஷ் மற்றும் ஸ்ரீஹரியின் மனநிலை குறித்து ஆகாஷின் நண்பர் ஒருவர் கூறியுள்ளார். அவர், ஸ்ரீஹரியின் நண்பர்கள் அனைவருக்கும் இதுகுறித்து தெரியும் என்பதால் அவர் நெருங்கிய நண்பர்களிடம் பழகுவதை கூட குறைத்துள்ளார்.மேலும் அவரது நண்பர்களும் ஸ்ரீஹரி இருக்கும்போது இதுகுறித்து டீசண்டாக எதுவும் பேசாமலே இருப்பர். ஆனாலும் அவர் தர்மசங்கடத்துடன் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்.
மேலும் அவர் எப்பொழுதும்
மிகுந்த மன அழுத்தத்திலேயே காணப்படுகிறாராம். சமூக வலைத்தளத்தில் ஏதாவது புகைப்படம் போட்டால் அடையாளம் கண்டுபிடித்து யாராவது ஏதாவது கேட்டுவிடுவார்களோ என எண்ணிஅந்த பக்கமே போவதில்லையாம். வளர்ந்த பையனோட ஒரு அப்பாவாக நான் அவனிடம் என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை என ஆகாஷ் மிகவும் வருத்தத்துடன் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.