மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விஜய், தனுஷ், திரிஷாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்யுங்க.. பாடகி சுசித்ரா விவகாரம்.! சீறிய வீரலட்சுமி!!
பாடகி சுசித்ரா தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சில பிரபலங்களை குறித்து பேசியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், தனது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மற்றும் தனுஷை இணைத்து பேசியிருந்தார். மேலும் பிரபலங்களான விஜய், திரிஷா, பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது.
வீரலட்சுமி பரபரப்பு புகார்
இந்நிலையில் இதுகுறித்து தமிழக முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் புகார் அளித்துள்ளார். அதில் அவர், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இளைய சமூகத்தினர் சீரழியும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி இளம் சிறார்களிடையும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளது. இதனால் மாணவர்களது உடல்நலன், கல்வி மற்றும் அறிவு என அனைத்தும் நாசமாகிறது. மேலும் இளைய சமூகத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.
இதையும் படிங்க: எல்லாம் முடிந்துவிட்டது.! புகைப்படத்துடன் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட அப்டேட்!!
மருத்துவ பரிசோதனை
பிரபல நடிகர் நடிகைகளான விஜய், தனுஷ், விஜய் யேசுதாஸ், திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் தடை செய்யப்பட்ட கொடிய போதைப் பொருட்களான கொக்கைன் பயன்படுத்துவதாக பாடகி சுசித்ரா யூடியூப் சேனல் பேட்டிகளில் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளையும் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனரா என உடல் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்? மேலும் கொக்கைன் எங்கிருந்து கிடைத்தது என விசாரித்து மாஃபியா கும்பலையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைய சமூகத்தினரை பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஹீரோவாகும் பிரபல இயக்குனரின் மகன்.! தளபதி விஜய்யுடன் சந்திப்பு.! வைரலாகும் புகைப்படங்கள்!!