மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாம் முடிந்துவிட்டது.! புகைப்படத்துடன் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட அப்டேட்!!
லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘The Greatest of All Time’ (GOAT) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை சினேகா, மீனா சௌத்ரி, ஜெயராம், பிரபு தேவா, லைலா, மோகன், பிரஷாந்த், வைபவ், அஜ்மல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முன்னணி ரோலில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தளபதி விஜய்யின் GOAT
GOAT படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் விஜய்யின் 68-வது படமான இதில் அவர் அப்பா,மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். அதில், அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சொளத்ரி நடித்துள்ளனராம். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தில் விஜய் பாடிய முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இதையும் படிங்க: இறந்தபிறகும் GOAT படத்தில் நடித்துள்ள நடிகர் விஜயகாந்த்!! வெளியான மாஸ் தகவல்..
VFX பணிகள் நிறைவு
செப்டம்பர் 5-ஆம் தேதி GOAT படம் வெளியாக உள்ளது என தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக வெங்கட் பிரபு அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இனியும் வெளியீட்டுக்காக காத்திருக்க முடியாது என வெங்கட் பிரபு புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். அவதார், கேப்டன் மார்வெல், அவெஞ்சர்ஸ், எண்ட்கேம் போன்ற ஹாலிவுட் படங்களுக்கு விஎஃப்எக்ஸ் அமைத்த குழுவினரே GOAT படத்திற்கும் பணிபுரிந்துள்ளனராம்.
Successfully completed the VFX work with @actorvijay na at @lolavfx can’t wait for the output!!! #TheGreatestOfAllTime #TheGOAT #aVPhero @archanakalpathi @aishkalpathi @hariharalorven pic.twitter.com/6BL29XOoXK
— venkat prabhu (@vp_offl) May 18, 2024
இதையும் படிங்க: இவ்வளவு கோடியா? விஜய்யின் GOAT படத்தை அதற்குள் பலகோடி கொடுத்து வாங்கிய பிரபல நிறுவனம்..