மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹீரோவாகும் பிரபல இயக்குனரின் மகன்.! தளபதி விஜய்யுடன் சந்திப்பு.! வைரலாகும் புகைப்படங்கள்!!
இயக்குனர் விக்ரமன்
தமிழ் சினிமாவில் புதுவசந்தம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே பிரபலமான இயக்குனரானவர் விக்ரமன். இவர் பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல, பிரியமான தோழி உள்ளிட்ட பல தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர். இவரது ஒவ்வொரு படைப்பும் இன்றும் ரசிகர்களால் பெருமளவில் விரும்பி பார்க்கப்படுகிறது.
ஹீரோவாகும் விக்ரமனின் மகன்
இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா. இவர் தற்போது கே.எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் ஹிட் லிஸ்ட் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தை
சூரியகதிர் மற்றும் கே.கார்த்திகேயன் ஆகியோர் இயக்கியுள்ளனர். இப்படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திரகனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
இதையும் படிங்க: இறந்தபிறகும் GOAT படத்தில் நடித்துள்ள நடிகர் விஜயகாந்த்!! வெளியான மாஸ் தகவல்..
தளபதி விஜய் வாழ்த்து
படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்த விஜய் கனிஷ்கா, "உங்களது அன்பான வார்த்தைகளுக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. மேலும் எனக்கும், எங்களின் ஹிட்லிஸ்ட் படத்திற்கும் அளித்த ஆதரவிற்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
thank you thalapathy @actorvijay sir for all the kind words and encouragement . Thank you for supporting me and #hitlist #thalapathy #vijay #thalapathyvijay pic.twitter.com/rhMHUMDKqV
— Vijay Kanishka (@kanvikraman) May 15, 2024
இதையும் படிங்க: "கல்வி முக்கியம்"னு அடித்துக்கொள்ளும் விஜய் வாங்கிய மார்க்கை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி.!