Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ இவர் தான்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா வெளியிட்டது.!
பட உருவாக்கம் குறித்த படிப்பு
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட தயாரிப்பு டிப்ளமோ படித்து இருக்கின்றார். அடுத்து லண்டனில் திரைக்கதை எழுதுவதைப் பற்றி படித்திருக்கின்றார். இவரது இயக்கத்தில் சில குறும்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
உறுதியான தகவல் :
இந்த நிலையில், அவர் தென்னிந்திய சினிமாவில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக நீண்ட காலமாக தகவல் கசிந்து வருகின்றது. தற்போது அந்த படத்தை தயாரிப்பதாக லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை வெளியிட்டு இருக்கிறது. இதில் ஹீரோவாக நடிகர் சந்திப் கிஷன் நடிக்கிறார்.
இதையும் படிங்க: கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
ஜனவரியில் துவக்கம் :
இவர் ஏற்கனவே தமிழில் மாநகரம், ராயன் மற்றும் மைக்கேல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் வரும் ஜனவரி மாதம் முதல் துவங்கவுள்ளது. இதற்கு தமன் இசையமைக்கிறார்.
மோஷன் வீடியோ வெளியீடு :
தற்போது இந்த திரைப்படத்தின் மோஷன் வீடியோவை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
A new chapter unfolds 📖 as we welcome our exceptional cast & crew @sundeepkishan 😎 @MusicThaman 🎶 & @Cinemainmygenes ✂️🎞️ on board for JASON SANJAY-01 📚💵
— Lyca Productions (@LycaProductions) November 29, 2024
▶️ https://t.co/5kPO4Kvz0U
On floors soon... 📽️🎬@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran…
இதையும் படிங்க: இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!