#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
திருவிழா போல கொண்டாடும் ரசிகர்கள் :
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்திற்கும் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும். அதிலும் படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். இதுவரை பல்வேறு ஜானர்களில் விஜய் திரைப்படங்கள் நடித்துள்ளார். சமீப காலமாக அவர் ஆக்சன் திரைப்படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்.
கட்சியை அறிவித்த விஜய் :
ஆரம்ப காலத்தில் குடும்பம் மற்றும் நகைச்சுவை சார்ந்த திரைப்படங்களின் மூலம் தான் விஜய் பெயர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது அவர் நடிகர் என்பதை தாண்டி அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார். அப்போது அவருக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. தொடர்ந்து அவர் கட்சி ஆரம்பிக்கும் வேலைகளில் ஈடுபட்டு தனது கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை அறிவித்தார்.
இதையும் படிங்க: இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
முதல் மாநாட்டிலேயே தெளிவு :
அதன் பின்னர், சமீபத்தில் அவரது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. அதில் அவரே எதிர்பாராத அளவிற்கு ஆதரவு கிடைத்தது. அவர்கள் எதிர்பார்த்து கொட்டகை அமைத்திருந்ததை விட அதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனால் மிகுந்த சிரமங்களும் ஏற்பட்டது. அவர் கலந்து கொண்டு பேசிய முதல் மாநாட்டிலேயே தனது நிலைப்பாடு என்ன என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்திருந்தார். இது மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியது.
ஒயிட் அண்ட் ஒயிட் :
இந்த நிலையில், மாநாடு நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்த விவசாய நில உரிமையாளர்கள், மற்றும் மாநாடு திறம்பட நடக்க காரணமாக இருந்தவர்கள் அனைவருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது வெள்ளை உடையில் தோன்றினார். இதற்கு முன்பு கட்சிசாரா கூட்டங்கள் சிலவற்றை அவர் நடத்திய போதிலும் அவர் வெள்ளை உடை அணிந்ததில்லை. ஆனால், கட்சி துவங்கிய நாள் முதல் அவர் எங்கு சென்றாலும் வெள்ளை சட்டை தான் அணிந்து செல்கிறார். இது அவரது தொண்டர்களான ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தவெக மாநாடை மறைமுகமாக சுட்டிக்காட்டி, சூர்யாவை அரசியலுக்கு அழைத்த நடிகர்; கங்குவா இசை வெளியீடு விழாவில் அதிர்ந்த அரங்கம்.!