திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் 8 வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சீசனுக்கான பிக் பாஸ் வீட்டில் ரவீந்தர், ரஞ்சித், அருண், அர்னவ், முத்துக்குமரன், ஜெப்ரி, விஜே விஷால், தீபக், ஜாக்குலின், தர்ஷா குப்தா, ஆனந்தி, சாச்சனா, சுனிதா, சௌந்தர்யா, பவித்ரா, தர்ஷிகா, அன்ஷிகா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
தொகுப்பாளர் அறிவுறுத்தல்
இவர்களில் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். இதனிடையே, இரண்டாவது வாரத்திற்குள் போட்டியாளர்கள் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இன்று 9 நாளில் நான்காவது ப்ரோமோ வெளியிடப்பட்டது. முதல் வாரத்தில் போட்டியாளர்கள் மடைமாற்றி செயல்பட, விஜய் சேதுபதி அதனை கவனித்து அறிவுறுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: Bigg Boss Tamil: முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் ரவீந்தர்; முதல் எலிமினேஷன் இதோ.!
இதனால் போட்டியாளர்கள் தங்களின் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து பலரும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜாக்குலின் அழுதுகொண்டு இருக்கும்போது, முத்துக்குமரன் ஆதங்கப்பட்டு எதற்காக அழுகிறாய்? என்று கேட்கிறார்.
ஜாக்குலின் அழுகை
ஆத்திரமடைந்த ஜாக்குலின் அழுவதற்கு கூட கேட்டுக்கொண்டுதான் அழ வேண்டுமா? இவ்வாறு நீங்கள் பேச வேண்டாம். நீங்கள் எதற்காக அதையெல்லாம் சொல்ல வேண்டும். இதற்கெல்லாமா கேள்வி கேப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார். ஜாக்குலின் தொடர்ந்து அழுது தனது விளையாட்டை தொடங்கி இருக்கிறார்.
அதேபோல, காரசாரமாக போட்டியாளர்கள் விவாதம் செய்துகொண்ட காணொளியும் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: பிக் பாஸ் இல்லத்தில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்படுகிறார் ரஞ்சித்? விபரம் உள்ளே.!