பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வாவ்.. தளபதி விஜய்யுடன் கியூட்டாக விளையாடி கொண்டிருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?? இப்போ ரொம்ப ஃபேமஸான ஹீரோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார்.
தளபதி விஜய் இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். லியோ படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தளபதி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. மேலும் விஜய்யின் சிறுவயது மற்றும் யாரும் பெருமளவில் கண்டிராத அரிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வகையில் விஜய்யுடன் சிறு வயதில் குழந்தை ஒன்று விளையாடும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் யார் இந்த குழந்தை என ஆவலுடன் கேட்டு வந்தனர். அவர் வேறு யாருமல்ல. விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமான விக்ராந்த்தான். விக்ராந்த் நடிகர் விஜய்யின் அம்மாவின் சகோதரியின் மகன் ஆவார்.