விஜய் குறித்து தரக்குறைவாக பேசிய மீரா மிதுன்! மாஸாக அவரது தம்பி விக்ராந்த் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!



vikranth-tweet-about-meera-mithun-controversy-video

பிக்பாஸ் மீரா மிதுன் தமிழ் சினிமாக்களில் வாரிசு நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும்,  கோலிவுட் மாஃபியாவை பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள். விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் நெபடிசம் ப்ராடெக்டுகள் என்று சமூக வலைதளங்களில் மோசமாக பேசி தொடர்ந்து  வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 

 இதனால் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி மீரா மிதுனை மோசமாக வறுத்தெடுத்தனர். இந்த நிலையில் மீரா மிதுன் மீண்டும் விஜய் மற்றும் சூர்யா மனைவிகளை மிகவும் தரக்குறைவாக பேசி வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் கொந்தளித்து போனர்.  மேலும் விஜய் ரசிகர்கள் பலரும் அவரை கண்டித்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.


இந்நிலையில் விஜய்யின் தம்பியான விக்ராந்த் சந்தோஷ் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாழ்க்கை மிகவும் குறுகியது. எதிர்மறையான கருத்துக்களை வெட்டிவிடுங்கள் மற்றும் கிசுகிசுக்களை கண்டு கொள்ள வேண்டாம். போலியான ஆட்கள் மற்றும் அவர்களின் நாடகத்தை யாரும் பெரிதாக எடுக்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தாலும் அவர்கள் கோபம் குறைந்தபாடில்லை.