திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பேருந்தில் சொந்த ஊருக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு.! என்னதான் நடந்தது? பகீர் சம்பவம்!!
கோவை அருகே பாலத்துறைப் பகுதியில் வசித்து வருபவர் கார்மேகம். இவரது மகள் மகாலட்சுமி. 23 வயது நிறைந்த அவர் என்ஜினீயரிங் முடித்தநிலையில் சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவர் விடுதி ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.
பேருந்தில் இளம்பெண் பயணம்
மேலும் அதற்காக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையும் எடுத்துக் கொண்டுள்ளார். ஆனாலும் உடல்நலம் சரியாகாத நிலையில், மகாலட்சுமி லீவு எடுத்துக் கொண்டு ஊருக்கு செல்ல முடிவெடுத்து தனியார் ஆம்னி பேருந்தில் ஊருக்கு சென்றுள்ளார். பின் பேருந்து நேற்று காலை கோவை காந்திபுரம் பகுதியில் நின்ற பிறகும் அவர் பேருந்திலிருந்து இறங்கவில்லை. தனது இருக்கையிலே தூங்கியவாறு இருந்துள்ளார்.
சடலமாக மீட்பு
பின்னர் நடத்துனர் அவரை எழுப்ப முயன்ற போது அவர் எழுந்திருக்கவில்லை. மூச்சு பேச்சில்லாமல் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த அவர்கள் மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நொறுங்கிய கார்.! விபத்தில் உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை.! சோகத்தில் ரசிகர்கள்!!
இதையும் படிங்க: போதையில் விஜய் வீட்டின் முன்பு டான்ஸ் ஆடிய திரிஷா.? சர்ச்சையை கிளப்பிய திரை பிரபலம்.!?