திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
5 வயது பிஞ்சுக்கு தந்தையால் பாலியல் கொடுமை.! மருத்துவமனையில் தாய்க்கு பேரதிர்ச்சி.!
உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி :
சென்னையில் திரு வி க நகர் பகுதியில் வசித்து வரும் 28 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் முடிந்துள்ளன. இந்தப் பெண்ணிற்கு 5 வயதில் மகள் ஒருவர் இருக்கின்றார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த சிறுமிக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் :
இதன் காரணமாக சிறுமியின் தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளார். அப்போது குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அந்த குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண்கள் வார்டில் சுய இன்பம்.. வைரலான வீடியோ.. வெடித்த சர்ச்சை.!
வேலியே பயிரை மேய்ந்த கதை :
இது அந்த குழந்தையின் தாய்க்கும் மருத்துவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து குழந்தையிடம், "இவ்வாறு உன்னிடம் நடந்து கொண்டது யார்.?" என்று அவர்கள் விசாரித்ததில் அந்த சிறுமியின் தந்தை தான் இப்படிப்பட்ட ஒரு மோசமான செயலில் ஈடுபட்டது என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் போலீசில் புகார் அளிக்க உடனடியாக போலீசார் அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தந்தை :
அவர் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் போலீஸாரால் ஆஜர் படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 5 வயது குழந்தைக்கு தந்தையே இப்படி ஒரு மோசமான கொடுமையை செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 3 முறை கொலை செய்ய முயற்சி செய்த மனைவி.. 3வது முறையில் துடிதுடித்து இறந்த கணவன்.!