திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
3 முறை கொலை செய்ய முயற்சி செய்த மனைவி.. 3வது முறையில் துடிதுடித்து இறந்த கணவன்.!
காதல் திருமணம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதுநல்லூர் பகுதியில் வசித்து வரும் ரவி என்பவர் ஒரு மின் வியாபாரி. 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயந்தி என்ற பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டு அந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில், பொறுப்பாக குடும்பத்தை நடத்தாமல் ரவி குடி போதைக்கு அடிமையாகியுள்ளார்.
போதைக்கு அடிமையான கணவன் :
அன்றாடம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் ரவி ஜெயந்தியை தனது போதைக்கு ஊறுகாய் ஆக்கியுள்ளார். அடிப்பது, மோசமாக நடத்துவது போன்ற துன்புறுத்தல்களில் அவர் ஈடுபட்டு வந்த நிலையில் ஜெயந்தியால் அந்த கொடுமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, காதலித்த கணவன் என்றும் பார்க்காமல் கொடுமை தாங்க முடியாத ஜெயந்தி ரவியை எப்படியாவது தீர்த்து கட்டி விட வேண்டும், அப்பொழுதுதான் நமக்கு நிம்மதி கிடைக்கும் என்று நினைத்துள்ளார்.
இதையும் படிங்க: "பெத்த அப்பன் தானே.?" 'கற்பழிச்சதுக்கு மன்னிச்சிடுங்க..' - பெண் காவலரின் பேச்சால் பரபரப்பு.!
போட்டு தள்ள திட்டம் :
எனவே அவரை எப்படி கொள்வது என்று பல்வேறு வகையில் அவர் திட்டம் தீட்ட துவங்கியுள்ளார். அவர் முயற்சி பல நடத்தியும் அது தோற்றுப் போன நிலையில், சம்பவ தினத்தன்று சமையல் எண்ணெயை கொதிக்க வைத்து, ரவி மீது ஊற்றியுள்ளார். இதில் ரவி துடிதுடித்து அலறி அடிக்க அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை ரவிக்கு கை கொடுக்கவில்லை. அவர் மரணித்தார்.
போலீசாருக்கே அதிர்ச்சி :
இந்த சம்பவத்தில் ஜெயந்தி போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போது தன் கணவரை கொல்ல எப்படி எல்லாம் திட்டம் தீட்டினேன் என்பது குறித்து ஜெயந்தி பதில் கூறியது போலீசாரையே அதிர வைத்தது. ஏற்கனவே ஒருமுறை உணவில் விஷம் வைத்து கொள்ள முயற்சித்ததாகவும், இரண்டாவது முறை ரவி மீது பீரோவை தள்ளிவிட்டு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியை தழுவின என்றும் ஜெயந்தி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பாபநாசத்தை மிஞ்சிய.. பயங்கர கொலை.. கள்ளக்காதல் மோகத்தில்.. பலியான கேர்ள்பெஸ்ட்டி.!