மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பெத்த அப்பன் தானே.?" 'கற்பழிச்சதுக்கு மன்னிச்சிடுங்க..' - பெண் காவலரின் பேச்சால் பரபரப்பு.!
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஒரு 13 வயது சிறுமியை பெற்ற தந்தை மற்றும் பெரியப்பா மகனான அண்ணன் இருவரும் சேர்ந்து 9 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் கொடுக்க அதை அவர்கள் ஏற்காமல் இருப்பதாக தாய் பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.
தந்தையும், தமையனும் பாலியல் டார்ச்சர் :
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அந்த தாய், " எனக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. எனக்கும் கணவருக்கும் தகராறு என்பதால் கடந்த ஆறு ஆண்டுகளாக நான் பிரிந்து தனியாகத்தான் வசித்து வருகிறேன். எனக்கு வயதுக்கு வந்த ஒரு பெண் இருக்கிறாள். அவர் இரண்டு ஆண்டுகள் என் கணவர் வீட்டில் இருந்தார். அப்போது அவர் பூப்பெய்த நாளில் இருந்து 9 மாதங்களாக அவரது தந்தை மற்றும் சிறுமியின் பெரியப்பா மகன் ஆகியோர் சேர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாபநாசத்தை மிஞ்சிய.. பயங்கர கொலை.. கள்ளக்காதல் மோகத்தில்.. பலியான கேர்ள்பெஸ்ட்டி.!
போலீஸாரின் அலட்சிய போக்கு :
இது பற்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் போலீசில் புகார் கொடுத்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க தயாராக இல்லை. குழந்தை இப்போது மருத்துவமனையில் இருக்கிறாள். நான் ஹாஸ்பிடல்க்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் நடையா நடக்கிறேன். ஆனால், அந்த மோசமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. என் பிள்ளை அங்கே வயிற்று வலியால் துடிக்கிறது. நான் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, ' நீங்கள் புகாரை எடுக்கவில்லை என்றால் நான் இங்கேயே உயிரை விடுவேன்' என்று கூறினேன்.
பெண் காவலர் திமிர் பேச்சு :
அதற்கு ஒரு பெண் போலீஸ் அங்கிருந்த ஒரு பேப்பரை தூக்கி எறிந்து, "இதில் புகார் எழுது, அதான் அண்ணன் காரன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டானே அது போதாதா.? பெத்த அப்பன் தானே? மன்னிக்கக் கூடாதா.?" என்று கேட்கிறார். என் குழந்தைக்கு நியாயம் வேண்டும். அவளது உடல்நிலை மோசமாக இருக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்." என்று அந்த தாய் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: நம்பி வந்த பெண்ணை, நண்பனுக்கு விருந்தாக்கிய கயவன்.. பெண்ணின் தந்தை அதிரடி முடிவு.!