"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா.? கற்றாழை போதும்.!! வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்.!!
வறண்ட நிலத் தாவரமான கற்றாழை பொதுவாக அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் கற்றாழையில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. மேலும் இளம் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனை உட்பட பல நோய்களுக்கும் கற்றாழை தீர்வாக உள்ளது. கற்றாழையின் நன்மையை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
கற்றாழையில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள்
கற்றாழையில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்திருக்கிறது. மேலும் இவற்றில் வைட்டமின் சி மற்றும் இ நிறைந்துள்ளது. மேலும் இதில் கால்சியம், குரோமியம், காப்பர், மக்னீசியம், மாங்கனிசு, பொட்டாசியம் மற்றும் ஜிங்க் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
உடலில் நச்சுக்களை நீக்க உதவும் கற்றாழை
கற்றாழையானது அதிக அளவு வைட்டமின்கள் மினரல்கள் மற்றும் அமினோ அமிலங்களால் நிறைந்துள்ளது. இவை நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க துணை புரிகின்றன. கற்றாழையை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வருவதால் உடல் இயற்கையாகவே டிடாக்ஸ் ஆகிறது.
இதையும் படிங்க: வாவ்... உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டை.!! அற்புதமான மருத்துவ குணங்கள்.!!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கற்றாழையில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட துணை புரிகிறது. கற்றாழையை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடலின் தொற்று நோய்களுக்கு எதிரான ஆற்றலை அதிகரிக்க இயலும். மேலும் கற்றாழையில் நிறைந்திருக்கும் பாலிசாக்கரைடுகள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட தூண்டுகிறது.
மலச்சிக்கலை போக்கும் கற்றாழை
கற்றாழையின் இலைகளில் இருந்து வடியும் பசை போன்ற திரவமான லேடக்ஸ் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக விளங்குகிறது. மேலும் கற்றாழையில் இருக்கும் அலோயின் என்ற வேதிப்பொருள் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலின் செரிமான மண்டலத்தை வலுப்படுத்துவதோடு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எனவே தினமும் உணவில் கற்றாழையை எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
இதையும் படிங்க: வாவ்... முகப்பொலிவு முதல் கிருமி நாசினி வரை.!! பேக்கிங் சோடாவின் நன்மைகள்.!!