வாவ்... முகப்பொலிவு முதல் கிருமி நாசினி வரை.!! பேக்கிங் சோடாவின் நன்மைகள்.!!



benefits-of-baking-soda

பேக்கிங் சோடா சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். சோடியம் கார்பனேட் என்ற வேதியியல் பெயர் கொண்ட பேக்கிங் சோடா, கேக் போன்ற பேக்கரி தயாரிப்புகளிலும் பக்கோடா, பஜ்ஜி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இட்லி, தோசை மாவிலும் பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது. இந்த பேக்கிங் சோடாவை உணவு தயாரிப்பது தவிர நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் பயன்படுத்தலாம். இதன் நன்மைகள் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.

கிருமி நாசினி

பேக்கிங் சோடாவை அளவோடு பயன்படுத்துவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. பேக்கிங் சோடா பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. இது சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது. முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை பசை போல் தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி வந்தால் பருக்கள் நீங்கும். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை இது போல் செய்து வந்தால் விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து விடும்.

Healthy life

முகம் பொலிவு பெற

பளிச்சென்று அழகான பொலிவுடன் கூடிய முகத்தை பெற பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் நல்ல பேஸ்ட் போல கலக்க வேண்டும். பின்னர் இதனை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊறிய பின்னர் முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும். இது போல் தொடர்ந்து செய்து வர முகம் பொலிவு பெறும்.

இதையும் படிங்க: எச்சரிக்கை... வைட்டமின் பி12 குறைபாடு.!! இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவர் அணுகுங்கள்.!!

நகங்களில் உள்ள கறைகளை நீக்க

பேக்கிங் சோடா நகங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் கறைகளை நீக்கவும் உதவுகிறது. ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து அதில் கைகளை நன்றாக ஊற வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து கைகளை வெளியே எடுத்து கழுவினால் நகங்களில் உள்ள அழுக்கு மற்றும் கரைகள் மறைந்துவிடும்.

இதையும் படிங்க: வாவ்... கருஞ்சீரகம் புற்று நோயை குணப்படுத்துமா.? ஆய்வுகள் என்ன சொல்கிறது.?