மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்... உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டை.!! அற்புதமான மருத்துவ குணங்கள்.!!
தாவர வகைகளில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களும் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வும் இருக்கிறது என சித்த வைத்திய குறிப்புகள் கூறுகின்றன. நம் வீட்டை சுற்றி வளரும் கொடி வகைகளில் ஒன்றான பிரண்டையில் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் நிறைந்திருக்கிறது. பிரண்டையிலிருந்து தயாரிக்கப்படும் துவையல் பல நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது. இவற்றின் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிரண்டையில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள்
பிரண்டையில் வைட்டமின் சி, வைட்டமின் இ ஆகியவை நிறைந்திருக்கிறது. மேலும் இதில் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. இவை தவிர ரெஸ்வெராட்ரோல், கெட்டோஸ்டீராய்டு மற்றும் ஃப்ரீடீலின் போன்ற வேதிப் பொருள்களும் நிறைந்துள்ளது. பிரண்டையை தினமும் நம் உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையான பலவித நன்மைகள் கிடைக்கும்.
எலும்பு முறிவை குணப்படுத்தும் பிரண்டை
எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் உடைந்த எலும்புகளை ஒட்ட வைப்பதில் பிரண்டை முக்கிய பங்கு வகிக்கிறது. விபத்துகளில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் பிரண்டையின் வேரை நன்றாக காய வைத்து பொடியாக்கி அதனை வெந்நீரில் குழைத்து எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் தேய்த்து வந்தால் உடைந்த எலும்புகளிடையே இணைப்பு ஏற்படும். மேலும் பிரண்டையில் இருக்கக்கூடிய கால்சியம் சத்து எலும்புகள் வலுவடைய உதவுகிறது. பிரண்டையை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும்.
இதையும் படிங்க: வாவ்... முகப்பொலிவு முதல் கிருமி நாசினி வரை.!! பேக்கிங் சோடாவின் நன்மைகள்.!!
உடல் எடை குறைப்பில் பிரண்டையின் பங்கு
நம் உடல் எடையை குறைப்பதற்கும் கட்டுக்குள் வைப்பதற்கும் பிரண்டை முக்கிய பங்காற்றுகிறது. பிரண்டையின் தண்டை மாங்காயுடன் சேர்த்து துவையல் போல அரைத்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும். பிரண்டையில் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க கூடிய மூலக்கூறுகள் நிறைந்திருக்கிறது. மேலும் பிரண்டையில் இருக்கும் வேதிப்பொருட்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. மேலும் அஜீரணக் கோளாறு வாயு தொல்லை மற்றும் வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கவும் பிரண்டை உதவுகிறது.
இதையும் படிங்க: எச்சரிக்கை... வைட்டமின் பி12 குறைபாடு.!! இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவர் அணுகுங்கள்.!!