PCOD பிரச்சனையால் அவதியா.? 30 நாளில் சூப்பரான தீர்வு.!! எளிமையான வீட்டு வைத்தியம்.!!



best-home-remedy-for-pcod-in-30-days

இன்று பெரும்பாலான பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் என்று அறியப்படும் பிசிஓடி என்ற பாதிப்பாகும். இந்த நோயின் தாக்கத்தில் பெண்களின் கர்ப்பப்பை முதிர்ச்சி அடையாத அல்லது முழுமை பெறாத கருமுட்டைகளை உற்பத்தி செய்கிறது. இவை நீர்கட்டிகளாக கர்ப்பப்பையில் தங்கி விடுகின்றன. இதன் காரணமாக நாளடைவில் ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜன்கள் பெண்கள் உடலில் அதிகமாக சுரக்கிறது. இதனால் மலட்டுத்தன்மை, நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.

இந்த நோயை நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் செய்யும் மாற்றங்களின் மூலம் எளிதாக குணப்படுத்தி விடலாம் என பெண்கள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முறையான உணவு பழக்க வழக்கங்கள், நல்ல உறக்கம் மட்டும் உடற்பயிற்சி ஆகியவை இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கும் கருவேப்பிலை மோர் குடிப்பதன் மூலம் பிசிஓடி பிரச்சனைக்கு தீர்வு காணலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

health tips

தேவையான பொருட்கள்

1 கிளாஸ் மோர், 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை, சிறிதளவு இந்துப்பு

செய்முறை

ஒரு மிக்சர் ஜாரில் கருவேப்பிலை,மோர் மற்றும் இந்துப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று கலந்து அரைந்ததும் வடிகட்டாமல் அப்படியே கிளாசில் ஊற்றி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 30  நாட்கள் இந்த மோரை குடித்து வர பிசிஓடி பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்குமென பெண்கள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கருவேப்பிலையில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மோரில் இருக்கக்கூடிய குளிர்ச்சி ஆகியவை பெண்களுக்கான இந்த பிரச்சனையை சரி செய்யும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: நீரிழிவு நோயா.?? இந்த ஒரு பானம் போதும்.!! 15 நாளில் நம்பமுடியாத மாற்றம்.!!

இதையும் படிங்க: "உசுரு முக்கியம்... " காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்.!! மருத்துவர்கள் எச்சரிக்கை.!!