நீரிழிவு நோயா.?? இந்த ஒரு பானம் போதும்.!! 15 நாளில் நம்பமுடியாத மாற்றம்.!!



home-made-drink-for-diabetic-issues-15-days-improvement

நீரிழிவு நோய் என்பது இன்று ட்ரெண்டிங் போலாகிவிட்டது. ஒரு காலத்தில் 60 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு மட்டுமே இருந்த இந்த நோய் தற்போது 30 வயது இளைஞர்களையும் பாதிக்கிறது. சர்க்கரை நோய் சமூகத்தில் அதிகரித்திருப்பதற்கு முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள், தூக்கமின்மை, போதுமான உடற்பயிற்சி இல்லாதது போன்றவை காரணங்களாக அமைகிறது. முறையான உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் நல்ல வாழ்க்கை முறை மூலமாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். இயற்கை முறையில் நமது சமையலறையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் ஒரு பானத்தின் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்தப் பானத்தை எவ்வாறு தயார் செய்வதென்று இந்த பதிவில் காணலாம்.

தேவைப்படும் பொருட்கள்

வெந்தயம் 2 டீஸ்பூன், சிறிதளவு இஞ்சி, கருவேப்பிலை 10 முதல் 20, சிறிதளவு இலவங்க பட்டை, 2 கிளாஸ் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

health tips

செய்முறை

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் 2 டீஸ்பூன் வெந்தயத்தை கொதிக்கும் தண்ணீரில் போட்டவுடன் கருவேப்பிலை இலைகளையும் சேர்க்க வேண்டும். இவை நன்றாக கொதித்து வரும்போது இஞ்சியை இடித்து அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி இந்த கலவையுடன் சேர்ந்து கொதிக்க விட வேண்டும். இதன்பிறகு இலவங்கப்பட்டையை சேர்ந்து 5 நிமிடம் நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியதும் வடிகட்டி குடிக்கலாம்.

இதையும் படிங்க: "உசுரு முக்கியம்... " காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்.!! மருத்துவர்கள் எச்சரிக்கை.!!

நன்மைகள்

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் ரத்தத்தின் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் இந்த பானம் நம் உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வது கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த பானம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றவும் உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

இதையும் படிங்க: வாவ்... வேப்பிலை நீரிழிவு நோயை கட்டுப்படுத்துமா.? ஆச்சரியமளிக்கும் தகவல்.!!