இரவு சாப்பிடாமல் தூங்குறீங்களா.? உஷார்.. இப்படி எல்லாம் ஆபத்து வரலாம்.!



do not avoid dinner

ஒரு வேளை உணவை தவிர்ப்பது சரியானதா?

உடல் எடை பிரச்சனை அதிகம் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் காலை உணவை சாப்பிட மாட்டார்கள். மற்ற 2 வேளையும் சாப்பிடுவார்கள். அல்லது இரவு உணவை தவிர்த்து விட்டு, காலை, மதியம் மட்டும் சாப்பிடுவார்கள்.

ஒரு வேளை உணவை தவிர்ப்பது சரியானதா என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கிறது. இரவு உணவை தவிர்ப்பது நல்லது என கூறப்பட்டாலும் அவ்வாறு செய்யும்போது உடல் எடை குறையும் என்பது மருத்துவ ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் என்கின்றனர் நிபுணர்கள்.

இதையும் படிங்க: உயிரை எடுக்கும் முதுகு வலி.. இந்த விஷயம் போதும்.. டாக்டரே தேவையில்லை.!

பக்க விளைவுகள்

இரவு உணவை தவிர்த்தால் ரத்தத்தில் ஏற்ற இறக்கம், தூக்கமின்மை, பதற்றம், ஹார்மோன் இம்பேலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். நள்ளிரவு நேரத்தில் உணவு சாப்பிட வேண்டிய அவஸ்தையை ஏற்படுத்தும். இதனால், அல்சர், அசிடிட்டி, குடல் பிரச்சனைகள் ஏற்படும். மறுநாள் முழுவதும் நிலையற்ற உணர்வு இருக்கும்.

nighty

எளிய உணவுகள்

இரவு உணவை தவிர்க்க நினைத்தால், ஹெவியாக எதுவும் சாப்பிடாமல் தானிய கஞ்சி அல்லது பால் மட்டும் குடிக்கலாம். வெறும், வயிற்றில் தூங்கினால் கேஸ் பிரச்சனை ஏற்படலாம். ஆம்லெட், பிரட் டோஸ்ட் உள்ளிட்டவை சாப்பிடலாம். ரசம் சாதம் சாப்பிடலாம். இது டயட்டை பாதிக்காது. செரிமானம் விரைவாகும். எனவே எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்காது.

முட்டாள்தனமான செயல்

இரவு உணவை தவிர்க்காமல் 7 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட்டு விடுவது நல்லது. இரவு உணவை அறவே தவிர்க்காமல் கொழுப்பு, சர்க்கரை, உப்பு சேர்த்த உணவுகளை இரவில் சாப்பிடாமல் தவிர்க்கலாம். தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பே சாப்பிட்டு விட வேண்டும். மாறாக இரவு உணவை தவிர்த்து விட்டு உடல் எடையை குறைக்க போகிறேன் என்றால், அது ஒரு முட்டாள்தனமான செயல் என்று பெரும்பான்மையான உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

எச்சரிக்கை

இதனால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதுடன் அல்சர், சிறுநீரக வீக்கம், தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். மேலும், இது பிசிஓடி பிரச்சனையை பெண்களுக்கு அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 10 கிலோ வரை எடை குறைய உதவும் நீர்.. எப்படி பயன்படுத்துவது.?!