அடேங்கப்பா.. மீன் இறைச்சி சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.!



Fish Curry Benefits 

இறைச்சி வகைகளில் உடலுக்கு நன்மைகளை தரும் உணவுகளில் ஆடு-க்கு பின் அதிகம் கவனிக்கும் இடத்தில் இருப்பது மீன் வகை உணவுகள் தான். இதில் கடல் வகை மீன், நன்னீரில் வளரும் மீன் என இரண்டு விதங்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன. 

நாம் தொடர்ந்து மீனை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால், நமது உடலில் இருக்கும் பல்வேறு நோய்கள் நம்மை விட்டு ஓடும். வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது மீன் எடுத்துக்கொண்டால், சிறுநீரக பிரச்சனைகள் கட்டுப்படும். 

இதயம், சிறுநீரகம் பாதுகாக்கப்படும்

ஆஸ்திரேலியா நாட்டில் செயல்பட்டு வரும் ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் குளோபல் ஹெல்த் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயம் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அடேங்கப்பா... தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இவ்வுளவு நன்மைகள் கிடைக்குமா?.!

அதேபோல, மீனில் இருக்கும் மெக்னீசியம், பாஸ்பிரஸ், கால்சியம், வைட்டமின் டி, இரும்புச் சத்து போன்றவை சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. தினமும் உடற்பயிற்சி செய்வோர் வாரம் 2 முறையாவது மீன்களை சாப்பிடலாம். அதேபோல, கண்கள் பார்வை சார்ந்த பிரச்சனை உடையோருக்கும் மீன் வரப்பிரசாதம் ஆகும்.

இதையும் படிங்க: மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா.? கற்றாழை போதும்.!! வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்.!!