ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா.? மறந்தும் இந்த உணவுகளை எடுக்காதீர்கள்.!!



foods-asthma-patients-must-avoid

ஆஸ்துமா என்பது சுவாச குழாயில் ஏற்படுகின்ற மாற்றங்களால் உருவாகும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலை சுற்றி உள்ள காற்றுப்பாதைகளின் தசைகளில் வீக்கம் மற்றும் சுருக்கம் இருக்கும். இதன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதோடு வீசிங் ஏற்படும். மேலும் இவர்களுக்கு இருமல், மூச்சுத் திணறல் மற்றும் மார்பு இருக்கம் போன்ற பிரச்சனைகளும் இருக்கும். ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி காணலாம்.

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஆஸ்துமா இருப்பவர்கள் உலர் பழங்களை தவிர்க்க வேண்டும். மேலும் கார்பனேட்டட் குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும். அதிகமாக எண்ணெய் பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவுகள் மற்றும் இறால் மீன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். மேலும் வாயுவை உண்டாக்கக்கூடிய கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் மற்றும் மாவு பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

Healthhy Food

வாயு உணவுப்பொருட்களை ஆஸ்துமா நோயாளிகள் ஏன் தவிர்க்க வேண்டும்.?

கிழங்கு வகைகள் மற்றும் பருப்பு வகைகள் உடலுக்கு வாயு தொல்லையை ஏற்படுத்தும். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு வாயு தொல்லை ஏற்படும் போது அவை மார்பு மற்றும் விலா எலும்புகளில் அதிகமான அளவு இறுக்கம் மற்றும் அழுத்தத்தை கொடுக்கும். இவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் மேலும் சிரமத்தை ஏற்படுத்துவதால் இந்த வகை உணவுகளை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா.? கற்றாழை போதும்.!! வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்.!!

ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டி உணவுகள்

ஆஸ்துமா நோயாளிகள் சிவப்பரிசி கஞ்சி, இஞ்சி, பூண்டு, சத்துக்கள் நிறைந்த காய்கறிகள். தூதுவளை, கற்பூரவள்ளி போன்றவற்றை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் இவற்றில் இருக்கக்கூடிய ஆன்டி ஆக்சிடென்ட் மூலக்கூறுகள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இவை ஆஸ்துமா நோய்க்கு எதிராக போராடும் தன்மையையும் உடலுக்கு அளிக்கிறது.

இதையும் படிங்க: வாவ்... உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டை.!! அற்புதமான மருத்துவ குணங்கள்.!!