இதயத்தை பாதுகாக்கும் அற்புதப் பழம்.. ட்ரை பண்ணி பாருங்க.!



Health benefits of mangusthan fruit

பலரும் அறியாத பழங்களில் ஒன்று மங்குஸ்தான் பழம். இந்தப் பழத்தில் பல மருத்துவ குணங்களைக் கொண்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளது. எனவே மங்குஸ்தான் பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

Mangusthan fruit

மங்குஸ்தான் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. மேலும் உடல் எடையை அதிகரிக்க விரும்புவர்கள்  மங்குஸ்தான் பழம் சாப்பிடுவதால் நல்ல தீர்வை கொடுக்கிறது.

மங்குஸ்தான் பழத்தில் உள்ள ஒமேகா என்னும் அமிலம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதேபோல் மங்குஸ்தான் பழத்தில் நார்சத்து அதிக அளவில் உள்ளதால் வயிறு தொடர்பான பிரச்சனைகளை குறைக்கிறது. மேலும் செரிமான பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

Mangusthan fruit

மங்குஸ்தான் பழ ஜூஸ் அடிக்கடி குடித்து வந்தால் உடல் சூடு குறைந்து மூல பிரச்சினைகள் குணமாகும். குறிப்பாக கொலஸ்ட்ராலை குறித்து ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.