#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காய்ச்சல், சளிக்கு கபசுரக்குடிநீர்..! யாரெல்லாம் இதை குடிக்க கூடாது.. தெரியுமா.?!
காய்ச்சல் மற்றும் சளியை இயற்கையான முறையில் குணப்படுத்த கபசுரக்குடிநீர் குடிக்கலாம். காய்ச்சல் இருக்கும் போது இதனைக் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், இதில் ஆடாதோடை, கோரைக்கிழங்கு, திப்பிலி, சுக்கு, கற்பூரவல்லி இலை, நிலவேம்பு, இலவங்கபட்டை ஆகிய பல மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதால் உடலில் பல பிரச்சனைகளை சரி செய்கிறது.
பல நன்மைகள் நிறைந்த இந்த கபசுரக்குடிநீர் தயாரிக்கும் முறை எப்படி என்று பார்ப்போம்.
இதையும் படிங்க: தொப்பை மற்றும் உடல் கொழுப்பை சர சரவென குறைக்கும் சுரைக்காய் ஜுஸ்..!
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதில் 2 தேக்கரண்டி அளவு கபசுரக்குடிநீர் சூரணம் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அது பாதியாக குறைந்து வரும்போது இறக்கி விட வேண்டும்.
யார் யார் கபசுர குடிநீர் குடிக்கலாம்? எப்போது குடிக்கலாம்.?!
சளி, காய்ச்சல் இருக்கும் போது பெரியவர்கள் 30 மில்லி அளவும், சிறியவர்கள் 15 மில்லி அளவும் மூன்று அல்லது நான்கு நாள் குடிக்கலாம். 3 அல்லது 4 வயது குழந்தைகளுக்கு ஒரு சங்கு அளவு மட்டும் கொடுப்பது நல்லது. அதுவும் மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
ஆனால், காட்டயம் 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது. ஏனெனில், கபசுரக்குடிநீரில் வீரியம் அதிகம் நிறைந்த மூலிகைகள் இருப்பதால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். மேலும், காய்ச்சல் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
காலாவதி நேர அளவு :
மற்றவர்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டும் குடிப்பது நல்லது. கபசுரக்குடிநீரில் உள்ள மூலிகைகள் தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும். மேலும், இதனை தயாரித்து வைத்துக் கொண்டு அடுத்த நாள் வரை குடிக்க கூடாது. குறைந்தபட்சம் 3 மணி நேரம் வைத்துக் குடிக்கலாம். காய்ச்சல் உள்ளவர்களை தவிர மற்றவர்கள் இந்த நீரைக் குடிக்கும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறப்பு.
இதையும் படிங்க: நெஞ்சு சளியை வேரோடு அழிக்கும் நெல்லிக்காய் சூப்..! இப்போதே செய்து பாருங்க.!