#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நெஞ்சு சளியை வேரோடு அழிக்கும் நெல்லிக்காய் சூப்..! இப்போதே செய்து பாருங்க.!
பெரிய நெல்லிக்காய் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக, தலை முடி உதிர்வதை நிறுத்தவும், முடி நன்றாக செழித்து வளரவும் தினமும் ஒரு நெல்லிக்காயை சுத்தம் செய்து விட்டு கடித்து நன்றாக மென்று சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மேலும், இதை சாறு எடுத்தும் குடிக்கலாம். இதில் உள்ள வைட்டமின்கள் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.
இந்த பதிவில் நெல்லிக்காய் சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 மேஜை கரண்டி
மிளகு - 1 மேஜை கரண்டி
சீரகம் - 1 மேஜை கரண்டி
கடுகு, வெள்ளை உளுந்து - 1 மேஜை கரண்டி
பெரிய நெல்லிக்காய் - 3
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 5 (பல்)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
எண்ணெய் - 3 மேஜை கரண்டி
செய்முறை :
முதலில் ஒரு மிக்சி கப்பில் 3 தோல் நீக்கிய நெல்லிக்காயை நறுக்கி சேர்த்து கொள்ளவும். பின்பு, அதில் மேலே கொடுக்கப்பட்ட அளவுகளின் படி மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் 1/2 கப் பாசிப்பருப்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு, ஒரு கடாயில் 3 மேஜை கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு, வெள்ளை உளுந்து சேர்த்து பொறிந்ததும் அதில் அரைத்து வைத்த நெல்லிக்காய் கலவையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு, வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். 2 கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும். இப்போது, ஆரோக்கியமான நெல்லிக்காய் சூப் தயார்.
குறிப்பு :
சளி பிரச்சனை உள்ளவர்கள் இந்த நெல்லிக்காய் சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.