தொப்பை மற்றும் உடல் கொழுப்பை சர சரவென குறைக்கும் சுரைக்காய் ஜுஸ்..!



zucchini-juice-to-reduce-belly-and-body-fat

உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதால் தான் தொப்பை வருகிறது. பெரும்பாலும், இப்போது இருக்கும் உணவு முறை தான் கெட்ட கொழுப்பு உருவாகக் காரணமாகிறது. எண்ணெயில் பொறித்த உணவுகள் மற்றும் பதப்படுத்தி வைக்கப்பட்ட உணவுகளை நாம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவு தான் தொப்பை. இதனை எவ்வாறு சரி செய்யலாம் என்று இந்த பதிவில் காண்போம்.

சுரைக்காய் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :

சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நம் உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை அளிக்கிறது. மேலும்,சுரைக்காய் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகிய பல சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

மேலும், சுரைக்காய் சாறு குடிப்பதால் கொழுப்பு மற்றும் நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. தொடர்ந்து குடித்து வந்தால் தொப்பை படிப்படியாகக் குறைவதை கண்கூடாக பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல், முகத்தையும் பளபளப்பாக மாற்றுகிறது. இப்படிப்பட்ட நன்மைகளை தரும் சுரைக்காய் சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Zucchini juice

தேவையானப் பொருட்கள் :

சுரைக்காய் - 1 

எலுமிச்சை சாறு - 1/4 தேக்கரண்டி 

உப்பு - ஒரு பின்ச் 

சீரகம் - 1/4 தேக்கரண்டி

மிளகு - ஒரு பின்ச்

செய்முறை

ஒரு மிக்சி கப்பில் மேலே கொடுக்கப்பட்ட அளவுகளின் படி தோல் நீக்கி நறுக்கிய சுரைக்காய், சீரகம், மிளகு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி அதோடு எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை கரைத்து தொப்பையைக் குறைக்கும். மேலும், சர்க்கரை நோயாளிகள் இந்த சாறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதில் கலோரி அளவு மிக குறைவாக இருப்பதால் உடல் எடைக் குறைக்க விரும்புபவர்கள் இந்த சாறை குடிக்கலாம்.

குறிப்பு :

இந்த சுரைக்காய் சாறு குடிப்பதற்கு முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.