மெனோபாஸ் காலத்திற்கான வயது என்ன..? இது தொடர்பாக செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்ன..?!



What is the age for menopause? What tests should be done in this regard..?!

பெண்களுக்கு, மெனோபாஸ் வயது என்பது 50 தான். ஒரு பெண்ணிற்கு ஐம்பது வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்றால் அந்த பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிரது என தெரிந்து கொள்ளலாம். 50- வயதிலும் மாதவிடாய் வந்து கொண்டிருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன், மெமோகிராம் பாப்ஸ்மியர் போன்ற பரிசோதனைகளைச் செய்து கொள்ளவேணடும். 

50 வயதுக்கு பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்தவேண்டும் என்று எதுவும் இல்லை. மேலும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே கை வைத்தியம் போன்ற வேறு எந்த முயற்சியும் செய்ய தேவையில்லை. மேலும் மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலையான பெரி மெனோமாஸ் நேரத்திலும் ஏற்படும்.

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் தலைவலி வரும் அந்த நேரத்தில் மாத்திரை எடுப்பது தவறில்லை. அதே சமயம் எல்லா மாதமும் இப்படி தலைவலி வந்தால் கவணிக்க வேண்டும். இவ்வாறு தொடர்வது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருக்ஙிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியம். 

அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்று செல்வதெல்லாம் மருத்துவரீதியாக உண்மை இல்லை. இது சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்த விஷயம். எனவே‌ இது, மரபியல் சார்ந்தது இல்லை. இப்பொழுது எல்லாம் காலதாமதமான திருமணம் காரணமாக, நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பது வயதிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். 

அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனைத்து விஷயங்களிலும் வெளிப்படையாக தெரிவதை பார்த்து வருகின்றோம். இதில் நமக்கு தெரியாதது‌ அவர்களுடைய இளமையான மனநிலை. இதன் காரணமாகவும், சிலருடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்துள்ளது. எனவே இதுகுறித்து கவலை பட தேவையில்லை.

இருப்பினும், 50-களிலும் மாதவிடாய் இருந்தால் கட்டாயம் என்னென்ன பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வது நல்லது. கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பாப்ஸ்மியர் பேன்ற பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். மேலும் 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை.