கேரளாவில் கொடூரம்... 15 வயது சிறுமி கூட்டு பல்லாதகாராம்.!! 3 சிறுவர்கள் வெறி செயல்.!!



15-year-old-girl-gang-raped-3-juvenile-under-police-cus

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 15 வயது சிறுமி, 2 சிறுவர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த கற்பழிப்பு சம்பவத்தை மற்றொரு சிறுவன் வீடியோ பதிவு செய்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவீரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி கூட்டு பலாத்காரம்

கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவியை அவருடன் படிக்கும் 2 மாணவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். மேலும் இந்தக் கொடூர சம்பவத்தை மற்றொரு சிறுவன் தனது செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது.

India

காவல்துறையில் வழக்கு பதிவு

தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் புகாரளித்தனர். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: மும்பையில் பரபரப்பு... 12 வயது சிறுமி கற்பழிப்பு குற்றவாளி மர்ம மரணம்.!! போலீஸ் விசாரணை.!!

பெற்றோருக்கு நோட்டீஸ்

மாணவியின் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவர்களின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சமீப காலமாக மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் கற்பழிப்பு மற்றும் கொலை போன்ற படுபாதக செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. மாறிவரும் கலாச்சாரம் மற்றும் போதைப் பொருள் பழக்கங்கள் இது போன்ற கொடூர குற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அட கொடுமையே... பெண் பக்தரை ஆபாச படமெடுத்த விவகாரம்.!! ராமர் கோவில் ஊழியர் கைது.!!