மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண் நண்பர் முன் நடந்த கொடூரம்... 21 வயது இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் ஆண் நண்பரின் கண் முன்னே இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த இளம் பெண்
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் வெளியே சென்று இருக்கிறார். அவர்கள் இருவரும் புனே நகரின் போப்தேவ் காட் என்ற பகுதியில் நள்ளிரவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் இவர்கள் இருவரிடமும் தகராறு செய்திருக்கிறது.
ஆண் நண்பர் கண் முன் கூட்டு பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் அந்தப் பெண்ணின் ஆண் நண்பரை கொடூரமாக தாக்கிய கும்பல் அவரது சட்டையை கழற்றி அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து உதைத்தது. பின்னர் 3 பேரும் சேர்ந்து இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: தகாத உறவால் விபரீதம்... பிஞ்சு குழந்தைகள் உட்பட 4 பேர் படுகொலை.!! கொடூர சம்பவம்.!!
காவல்துறை விசாரணை
இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்த நிலையில் அந்தப் பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் இது தொடர்பாக அதிகாலையில் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த பலாத்காரம் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அந்தப் பெண் கொடுத்த அடையாளங்களின் அடிப்படையில் வரைபடம் வரைந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: டியூசன் சென்ற 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... 18 வயது இளைஞர் கைது.!!