மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தகாத உறவால் விபரீதம்... பிஞ்சு குழந்தைகள் உட்பட 4 பேர் படுகொலை.!! கொடூர சம்பவம்.!!
உத்திரபிரதேச மாநிலத்தில் கள்ளக்காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பிஞ்சு குழந்தைகள் உட்பட குடும்பமே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் குற்றவாளி என்கவுண்டர் செய்து பிடிக்கப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் மனைவியுடன் கள்ளக்காதல்
உத்திரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள அகோர்வா பவானி காலனியைச் சேர்ந்தவர் சுனில் குமார்(35). அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவருக்கு பூனம்(32) என்ற மனைவியும் திருஷ்டி(6) மற்றும் சுனி(1) என்ற இரு மகள்களும் இருந்தனர். இந்நிலையில் இவரது மனைவி பூனத்திற்கு, சந்தன் வர்மா என்ற நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
ஆசிரியர் குடும்பத்தோடு சுட்டு படுகொலை
இந்நிலையில் கள்ள காதலர்களான பூனம் மற்றும் சந்தன் வர்மா இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பூனம் தனது காதலரான சந்தன் வர்மாவுடன் பேசுவதை தவிர்த்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சந்தன் வர்மா, பூனம் வீட்டிற்கு வந்து பூனம், அவரது கணவர் சுனில் குமார் மற்றும் 2 குழந்தைகளையும் சுட்டுக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: டியூசன் சென்ற 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... 18 வயது இளைஞர் கைது.!!
சுட்டு பிடித்த காவல்துறை
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தப்பியோடிய சந்தன் வர்மாவை சுட்டு பிடித்தனர். இந்த மோதலில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குற்றவாளியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; கட்டையை எடுத்து வந்து கொடூர தாக்குதல் நடத்திய இளைஞர்.!