ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்றாங்க, எய்ட்ஸில் ஏன் முன்னணி இடம்? இயக்குனர் டிஜே ஞானவேல்.!
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்டநெரிசல்.! 30 பேர் பலி!!

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா விழா ஜனவரி 13ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர்.
மேலும் மௌனி அமாவாசையான நேற்று அதிகாலை 1 மணி முதல் கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டு புனித நீராடினர். இந்நிலையில் அங்கு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. விசாரணையில் பக்தர்கள் பாதுகாப்பிற்குத் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தாண்டி குதித்து சென்றதால் பெரும் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கிளாஸ் ரூமில் மாணவருடன், பேராசிரியை திருமணம்.! ஆனா நடந்தது இதுதானாம்!! பலே காரணம்..
இதையும் படிங்க: "உன் கணவரை பார்க்கணும்மா" ஆசையாக அழைத்து அரண்மனை பட பாணியில் ஆணவக்கொலை.!