ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்றாங்க, எய்ட்ஸில் ஏன் முன்னணி இடம்? இயக்குனர் டிஜே ஞானவேல்.!
கிளாஸ் ரூமில் மாணவருடன், பேராசிரியை திருமணம்.! ஆனா நடந்தது இதுதானாம்!! பலே காரணம்..

மேற்கு வங்கத்தில் ஹரிங்கடா பகுதியில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் என்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு முதலாம் ஆண்டு மாணவனுக்கும், பேராசிரியைக்கும் வகுப்பறைக்குள்ளே, அனைத்து சடங்குகளுடனும் திருமணம் நடைபெறுவது போன்றும், இருவரும் திலகமிட்டு கொள்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகம், துணைவேந்தர் குழு அமைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் அந்த பேராசிரியை, இது மாணவர்களுக்கு எடுக்கும் பாடத்தின் ஒரு பகுதி, புதிதாக வந்த மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட ஆவணப்படம். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே இந்த வீடியோவை வைரலாக்கியுள்ளனர் என கூறியுள்ளார். எனினும் அவர் கூறியது உண்மைதானா? என்ற விசாரணை நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட பேராசிரியை மற்றும் மாணவர் வகுப்பிற்கு வரவேண்டாம் எனக் பல்கலைக்கழகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "உன் கணவரை பார்க்கணும்மா" ஆசையாக அழைத்து அரண்மனை பட பாணியில் ஆணவக்கொலை.!
இதையும் படிங்க: "காதலுக்கு கண்கள் இல்லை மானே" - ஆதரவற்றோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. வயோதிக ஜோடி திருமணம்.!