"உன் கணவரை பார்க்கணும்மா" ஆசையாக அழைத்து அரண்மனை பட பாணியில் ஆணவக்கொலை.!



telungana murder for love marriage

ஆறு மாதங்களுக்கு முன்பு, காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவ கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெவ்வேறு சமூகம்

தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற இளைஞர் பார்கவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.

இதையும் படிங்க: தாய் என்றும் பாராமல், மது போதையில் 70 வயது மூதாட்டியை மகன் செய்த கொடூரம்.!

அன்பாக அழைத்து ஆணவக்கொலை

telungana

எனவே, இருவரும் அவர்கள் அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு பார்கவியின் உறவினரான மகேஷ் என்பவர் கிருஷ்ணாவை பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இளம்பெண் குற்றச்சாட்டு

இந்த அழைப்பின் பேரில் அவரை பார்க்கச் சென்ற கிருஷ்ணா பிணமாக மீட்கப்பட்டார். தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் தன் கணவர் கிருஷ்ணாவை கொலை செய்துவிட்டனர் என்று பார்கவி போலீசில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, காவல்துறையினர் இது பற்றி சந்தேகத்தின் பேரில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எரிந்த நிலையில் சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்.! அடுத்தடுத்து வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!!