திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓட்டுனரின் உறக்கத்தால் உருண்டு உருக்குலைந்த கார்; ஒருவர் பலி., 5 பேர் படுகாயம்.. பதறவைக்கும் வீடியோ.!
சாலைகளில் நெடுந்தூர பயணம் செய்வோர், எப்போதும் விழிப்புடன் பயணிக்க வேண்டும். வாகனத்தின் ஓட்டுநர் உறக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அதனை மேற்கொள்ளவும் வேண்டும். தற்போது நடைபெறும் பெரும்பாலான விபத்துகளுக்கு மனித அலட்சியம் என்பது பெருவாரியான இடத்தை பெறுகிறது.
சாலையோரமாக உருண்டு விபத்து
அந்த வகையில், டெல்லி - மும்பை விரைவுச்சாலையில் நடைபெற்ற பதைபதைப்பு விபத்து சம்பவத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவில், கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டு இருந்தபோது, திடீரென சாலையோரம் சென்று உருண்டு, புதருக்குள் சிக்கி பின் சாலையில் உருண்டோடி வந்து நிற்கிறது.
இதையும் படிங்க: திருமண விழாவிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்.! பரிதாபமாக பறிபோன 13 உயிர்கள்!!
உறக்கத்தால் நடந்த சோகம்
இந்த விபத்தில் கார் கிட்டத்தட்ட பலமுறை கவிழ்ந்து உருண்டது. காரில் பயணம் செய்தவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட, படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விபத்திற்கு ஓட்டுனரின் உறக்கமே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாகனம் நல்வாய்ப்பாக எதிர்திசைக்கு செல்லவில்லை. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசைக்கு சென்றிருந்தால், பயங்கர விபத்து ஏற்பட்டு பலி எண்ணிக்கை அதிகரித்து இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
हादसा- दिल्ली-मुम्बई एक्सप्रेस वे/ हादसे का कारण ड्राइवर को नींद आ जाना,एक की मौत,5 गम्भीर घायल... pic.twitter.com/emfLFEixif
— आदित्य तिवारी / Aditya Tiwari (@aditytiwarilive) June 19, 2024
இதையும் படிங்க: லாரி மீது மோதி அப்பளம்போல நொறுங்கிய டெம்போ.. 6 பேரின் உயிரை குடித்த விபத்தின் அதிர்ச்சி காட்சிகள்.!