பீகாரில் கம்பெனி ஆரம்பித்ததுதான் வாழ்க்கையின் மோசமான முடிவு; நிறுவனர் புலம்பல்.. காரணம் என்ன?.! 



bihar-suresh-chips-semi-conductor-company-owner-comment

 

பீகார் மாநிலத்தில் சுரேஷ் சிப்ஸ் (Suresh Chips) எனப்படும் செமி கண்டக்டர் ஸ்டார்ட்டப் நிறுவனத்தை நடத்தி வருபவர் சாந்தன் ராஜ். இவர் தனது நிறுவனத்தில் அரசின் போதிய ஒத்துழைப்பின்மையால் ஏற்பட்ட பிரச்சனையால், தனது வாழ்நாளில் எடுத்த மிகமோசமான முடிவு என வருணித்து இருக்கிறார்.

அவர் நிறுவனம் அமைத்துள்ள பகுதியில் வேலையாட்கள் பணியாற்ற மறுப்பது, உட்கட்டமைப்பு குறைபாடு, பிற சிக்கல் போன்ற காரணத்தால் சாந்தன் தனது குற்றசாட்டுகளை மயிலை அரசுக்கு எதிராக முன்வைத்துள்ளார். கடந்த 2020 ம் ஆண்டு முசாபர்பூரில் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்... குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த பேரம்.!! அதிர்ச்சி தகவல்.!!

இளங்கலை பட்டம் வென்ற நிறுவனர் 

கடந்த 2009 ம் ஆண்டு ஒடிசாவில் உள்ள பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலையில் எலக்ட்ரானிக்ஸ் தொலைத்தொடர்பு துறையில் இளங்கலை பட்டம் வென்ற சாந்தன், சாம்சங், இன்டெல், சிலிகான் சர்விஸ், நோக்கியா பெல் உட்பட பல நிறுவனங்களில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டுள்ளார். 

பின் கடந்த 2020 ல் தனது மாநிலத்தில் நிறுவனத்தை தோற்றுவித்து மக்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்த செமிகண்டக்டர் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். பின் உட்கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாக 4 ஆண்டுகளாக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

மனம் நொந்துபோனார் 

இதுபோதாது என உள்ளூர் ரௌடியின் மிரட்டலும் அவருக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ரௌடி கும்பலின் அச்சுறுத்தலின்போது காவல்துறையை அணுகினாலும் உரிய உதவிகள் கிடைப்பதில்லை. இதனால் மனம் நொந்துபோனவர் கடந்த அக்.9 அன்று ட்விட் பதிவு செய்துள்ளார். 

இதனால் அவரின் மனக்குமுறல் அம்பலமாகி செய்தியாக வெளியான நிலையில், முஸாபர்பூர் மாவட்ட நிர்வாகம் தசரா பண்டிகைக்கு பின்னர் உரிய சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கால்வாய்க்குள் பாய்ந்த கார்; துரிதமாக செயல்பட்டு தந்தை-மகளை மீட்ட இளைஞர்.. குவியும் பாராட்டுக்கள்.!