கால்வாய்க்குள் பாய்ந்த கார்; துரிதமாக செயல்பட்டு தந்தை-மகளை மீட்ட இளைஞர்.. குவியும் பாராட்டுக்கள்.!



in Andhra Pradesh West Godavari Youth Saves Father and Daughter 

 

தந்தை மற்றும் மகளை இளைஞரின் சாதுர்ய செயல் காப்பாற்றியது. 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டம், தனுகு பகுதியில் கார் ஒன்று விபத்தில் சிக்கி, கால்வாயில் மூழ்கியது. இந்த காரில் தந்தை, மகள் பயணம் செய்த நிலையில், இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு இருவரின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறார். 

இதையும் படிங்க: சாலையோரம் உட்கார்ந்து இருந்ததால் சோகம்; நண்பர்கள் மீது பாய்ந்த கார்.. ஒருவர் பலி., 2 உயிர் ஊசல்.!

தனுகு சர்க்கரை ஆலை பகுதியில் கார் சென்றுகொண்டு இருக்கும்போது, கார் கால்வாயில் பாய்ந்து விபத்தில் சிக்கியது. இதனால் கார் நீருக்குள் மூழ்கிய நிலையில், பொதுமக்களில் ஒருசிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இளைஞருக்கு குவிந்த பாராட்டு

அச்சமயம் அங்கு வந்த சாய் ராம் பாபு என்ற இளைஞர், உடனடியாக அங்கிருந்தவர்களிடம் சுத்தியலை வாங்கி நீரில் குதித்து காரின் கண்ணாடியை உடைத்து தாய், மகளை பத்திரமாக மீட்டார். இளைஞரின் செயலை கண்டு நெகிழ்ந்துபோன மக்கள், அவரை பாராட்டினர்.

அங்குள்ள வேங்கடராயபுரம் பகுதியில் வசித்து வரும் தந்தை, மகள் திருவிழாவுக்காக மண்டபக்கா எல்லாரம்மா கோவிலுக்கு சென்றனர். அச்சமயம் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி இருக்கிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கிறேன் உதவியுடன் காரை மீட்டனர். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது. இளைஞரையும் அதிகாரிகள் பாராட்டினர்.

இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்.. லாரி மோதியதில் 10 பேர் பலி.! கோர விபத்து.!