மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்... குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த பேரம்.!! அதிர்ச்சி தகவல்.!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி 2 இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களைக் காப்பாற்ற பெற்றோர் பேரம் பேசிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்
பீகார் மாநிலம் சகர்சா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த அங்குஷ் மற்றும் பிட்டு என்ற 2 இளைஞர்கள் சிறுமியை காரில் கடத்திச் சென்றுள்ளனர். மேலும் காரில் வைத்தே சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக காரில் இசை சத்தத்தை அதிகமாக வைத்து சென்றுள்ளனர்.
காவல்துறையில் புகார்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பின் அவரது வீட்டருகே விட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். மேலும் சிறுமி தாமதமாக வந்தது குறித்து அவரது பெற்றோர் கேட்டபோது தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: வாயில் துணியை வைத்து அடைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்... 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!!
சிறுமியின் பெற்றோரிடம் பேரம்
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து குற்றவாளிகளின் பெற்றோர் சிறுமியின் தந்தையிடம் பேரம் பேசி இருக்கின்றனர். தங்களது பிள்ளைகள் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றால் பண உதவி செய்வதாகவும் சிறுமியின் திருமணத்திற்கு உதவுவதாகவும் தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொள்ள மறுத்த சிறுமியின் தந்தை தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஷாக்கிங்... வங்கி பெண் ஊழியர் பலாத்காரம்... வீடியோ எடுத்து மிரட்டிய ஓட்டுனர்... காவல்துறை நடவடிக்கை.!!