கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
ஜெர்மனிய பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம்; குற்றவாளி புற்றுநோயால் உயிரிழப்பு.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தில், கடந்த 2006ம் ஆண்டு 21 மார்ச் அன்று ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அன்றைய ஒடிசா ஹோம் கார்ட் & தீயணைப்புத்துறை டிஜி பிடியா பூஷன் மொஹந்தியின் மகன் பிட்டிஹோத்ர மொஹந்தி கைது செய்யப்பட்டார்.
இவரின் மீதான விசாரணை நடைபெற்று சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரின் மீதான குற்றசாட்டுகள் உறுதியும் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 20, 2006 அன்று அவரின் தந்தையின் முயற்சியின் பெயரில் இரண்டுவார பரோலில் வெளியே வந்த பிட்டிஹோத்ர மொஹந்தி தலைமறைவானார்.
இதையும் படிங்க: 10 வயது சிறுமியை சீரழித்த 57 வயது காம பிசாசு; நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
புற்றுநோயால் மரணம்
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் கடந்த 2013ல் மார்ச் 8 அன்று கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டார். பின் கடந்த மார்ச் 31, 2017 அன்று அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. பின் சிறையில் தனது வாழ்நாட்களை கழித்த பிட்டிஹோத்ரவுக்கு கடந்த 1 ஆண்டுகளுக்கு முன் வயிற்று புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் வாயில் துணையைப்பொத்தி பெண் பலாத்காரம்; தப்பியோடிய ஓட்டுநர்.!