திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
10 வயது சிறுமியை சீரழித்த 57 வயது காம பிசாசு; நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் துறையிலும் இணைந்து, தங்களின் நாட்டுக்கான பங்களிப்பை வெளிப்படுத்தி உலகுக்கே முன்னுதாரணமாக இந்தியாவை மாற்றுவதில் உறுதுணையாக இருந்து பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், இதே இந்தியாவில் இளம் வயதுள்ள சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படும் அதிர்ச்சி சம்பவங்களும் தொடருகின்றன. இவ்வாறான குற்றங்களை தடுக்க பாலியல் விவகாரங்களில் உள்ள தண்டனைகள் மிகக்கடுமையாக மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
10 வயது சிறுமி பலாத்காரம்
இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி மாவட்டத்தில் வசித்து வரும் 10 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி சம்பவத்தன்று தனது பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் வாயில் துணையைப்பொத்தி பெண் பலாத்காரம்; தப்பியோடிய ஓட்டுநர்.!
அச்சமயம் சிறுமியை தன்னுடன் அழைத்துச்சென்ற 57 வயது முதியவர், ஆள் அரவமற்ற இடத்தில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின் தாமதமாக உடல் சோர்வுடன் வீட்டிற்கு வந்த மகளிடம் பெற்றோர் விசாரித்தபோது உண்மை அம்பலமானது. இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமி துப்பாக்கி முனையில் பலாத்காரம்; 5வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொடுமை.!