நீட் தேர்வில் ஆல்மாராட்டம்... சிபிஐ கண்டறிந்து எட்டு பேர் கைது...!
டெல்லி, அரியானாவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்ட எட்டு பேரை சி.பி.ஐ. கைது செய்ததுள்ளது.
புதுடெல்லி, இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு கடந்த 17-ஆம் தேதி நாடு முழுவதும் நடந்தது. அதில், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள கவுதம் நகரை சேர்ந்த ஒருவர், இதற்கு காரணமாக செயல்பட்டுள்ளார். அவர் சில தேர்வு எழுநதுவவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வேறு நபர்களை ஏற்பாடு செய்துள்ளார்.
இதை அறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள், அந்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் அளித்த தகவலின்பேரில், டெல்லி, அரியானாவில் பல்வேறு தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிக் கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர. மேலும் இந்த வழக்கில் 11 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. தற்பொழுது எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
விசாரணையில், அவர்கள் எப்படி மோசடியில் ஈடுபட்டனர் என்று தெரிய வந்தது. யாருக்காக தேர்வு எழுதாத ஆள்மாறாட்டம் செய்ய வேண்டுமோ, அந்த தேர்வர்களின் பயனர் ஐ.டி.யையும், பாஸ்வேர்டையும் மோசடி நபர்கள் வாங்கிக் கொண்டு, தங்கள் திட்டப்படி, தங்களுக்கு தேவையான தேர்வு மையத்தை பெற அதில் திருத்தங்கள் செய்துள்ளனர். தேர்வர்களின் புகைப்படங்களில், ஆள்மாறாட்டம் செய்யும் நபர்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து மாற்றி உள்ளனர். தேர்வர்களின் அடையாள அட்டையை வாங்கி, மோசடி அடையாள அட்டைகளை தயாரித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.