செய்தியாளர் கொடூரமாக அடித்துக்கொலை; செப்டிக் டேங்கில் மீட்கப்பட்ட சடலம்.!



Chhattisgarh Reporter Death 


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாஸ்டர் பகுதியைச் சேர்ந்த செய்தியாளர் முகேஷ் சந்திரகர். இவர் சமீபத்தில் செப்டிக் டேங்க் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் முகம் அடையாளம் தெரியாத வகையில் அடித்து சிதைக்கப்பட்டு இருந்த நிலையில், உடலில் இருந்த டாட்டூவை வைத்து முகேஷின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான புகாரில், ஜனவரி 01 அன்று முகேஷ் மாயமானதாக, அவரின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார். காவல்துறையினர் நூற்றுக்கணக்கான கேமிராக்கள், 300 அழைப்புகளை ஆய்வு செய்து முகேஷின் சடலத்தை மீட்டனர். 

செய்தியாளரின் உறவினர்களும் கைது

இறுதியாக நடந்த விசாரணையில், ஆக்கிரமிப்பு & ஊழல் ஒன்றை அம்பலப்படுத்திய விஷயத்தில் முகேஷின் மீது ஆத்திரத்தில் இருந்த நபர்கள் முகேஷை கொலை செய்தது அம்பலமானது. இதில் செய்தியாளரின் உறவினர் சுரேஷ் சந்திரகர், அவரின் மனைவி, ரிதேஷ் சந்திரகர், சூப்பர்வைசர் மகேந்திரா ராம்டகே, தினேஷ் சந்திரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

Chhattisgarh

கொடூரமாக கொலை

சம்பவத்தன்று முகேஷிடம் சமாதானம் பேசுவதாக சாப்பிட அழைத்த கும்பல் அவரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளது. இதில் அவரின் தலையில் 15 எலும்பு முறிவு, நெஞ்சு எலும்பு 4 முறிவு, கழுத்து எலுமி முறிவு, 4 துண்டுகளாக கல்லீரல் என ரணசித்ரவதையை அனுபவித்து அவர் உயிரிழந்துள்ளார். இவர்களின் தாக்குதலில் அவரின் இதயம் பிடுங்கி வெளியே எடுக்கப்பட்டதும் நடந்ததாக கூறப்படுகிறது. செய்தியாளர் உயிரிழந்த விவகாரத்தில் மாநில அரசும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் நேரலையில் பெண் தற்கொலை; பதறியடித்து வீட்டுக்கு செல்வதற்குள் பிரிந்த உயிர்.!

இதையும் படிங்க: நடுரோட்டில் நடந்து சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்.. பொதுமக்கள் உதவி.!