வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
கொரோனாவால் அதிக பாதிப்பு! உலக அளவில் 7-வது இடத்திற்குச் சென்ற இந்தியா!
உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 8,392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,90,535-ஆக உயா்ந்துள்ளது.மேலும், நேற்று 230 பேர் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 5,394-ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 7வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை அதாவது மே மாதம் 25 ஆம் தேதி 1,30,000 பாதிப்புகளுடன் 10வது இடத்தில் இருந்த இந்தியா, ஒரு வாரத்தில் 1,90,535-ஆக உயா்ந்து 7வது இடத்திற்கு சென்றுள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. தொடர்ந்து ரஷியா, ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் இடத்தில் உள்ளது.