"மோடி பிரதாரமானால் மொட்டையடிக்கிறேன்" - எதிர்க்கட்சி வேட்பாளர் அறைகூவல்..! 



Delhi Lok Shaba 2024 Candidate Somnath Promise 

 

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கிறது. ஆனால், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி கருத்துக்கணிப்புகள் போலியானவை என குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. 

தேசிய அளவில் பாஜக ஆளுங்கட்சியாக இருந்தபோதிலும், தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் சிக்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, சிறைவாசத்தையும் எதிர்கொண்டு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. 

இதையும் படிங்க: தாய் உயிரிழந்தாலும் ஜனநாயக கடமையாற்றிய மகன்; பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்.!

பாஜகவுக்கு சாதகமான கருத்துக்கணிப்பு நிலவரம்

இந்நிலையில், நேற்று வெளியான கருத்துக்கணிப்புகளை தொடர்ந்து பாஜக கூட்டணி நமக்கு சாதகமாகும் என்ற குஷியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கருத்துக்கணிப்புகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள், தங்களின் எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். 

அதேபோல, இன்று வரை பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்ட நிலையில், காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை தேர்தல் முடிவுகள் வெளியாகும் 4ம் தேதி வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறது. இது வெற்றிபெற்றால்  அறிவிப்போம், இல்லையேல் விட்டுவிடுவோம் என்ற மனநிலையை எதிரொலிக்கிறது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 

மொட்டையடிக்க தயார்

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராகும் பட்சத்தில், நான் மொட்டையடடித்துக்கொள்கிறேன் என டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சோம்நாத் பார்தி அறிவித்துள்ளார். கருத்துக்கணிப்பு முடிவுகள் என்பது தவறானவை என்று தனக்கு தெரியும். இண்டி கூட்டணியே வெற்றிபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜூன் 04 ம் தேதி வெளியாகும் முடிவுகளை பொறுத்தே வெற்றி-தோல்வி இறுதி செய்யப்படும்.

இதையும் படிங்க: அடிமேல் அடி.. காங்கிரசுக்கு இந்த மாநிலத்தில் வெற்றிவாய்ப்பே இல்லையாம் - கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்.!