தாய் உயிரிழந்தாலும் ஜனநாயக கடமையாற்றிய மகன்; பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்.!



Bihar Jehanabad 2024 Elections man Cast vote

 

2024 இந்தியா பொது தேர்தல் இன்றுடன் நிறைவுபெற்றது. ஜூன் 4 ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. தேர்தல் கருத்துக்கணிப்புகளின்படி பாஜக ஆட்சி மீண்டும் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கருத்து கணிப்புகள் போலியானது எனது காங்கிரஸ் தலைமை கருத்து கூறி வருகிறது. 

இதனிடையே, இன்று நடைபெற்ற மக்களவை தேர்தல் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் உள்ள ஜகானாபாத் மக்களவைத் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்றது. இன்று காலை முதலாக பலரும் தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தி இருந்தனர். 

இதையும் படிங்க: அடிமேல் அடி.. காங்கிரசுக்கு இந்த மாநிலத்தில் வெற்றிவாய்ப்பே இல்லையாம் - கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்.!

தாய் இறந்தாலும் ஜனநாயக கடமை

இந்நிலையில், அத்தொகுதிக்குட்பட்ட தேவ்குள்ளி பகுதியில் மிதிலேஷ் யாதவ் என்பவரின் தயார் உயிரிழந்த நிலையில், அவர் தேர்தலில் வாக்களித்துவிட்டு பின் இறுதி சடங்கில் பங்கேற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தலில் எனக்கான வாய்ப்பை விட்டுவிட்டால் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 

இறுதிச்சடங்கு வாக்களித்த பின் நடைபெறும் என்பதால் தேசத்திற்கு மதிப்பளித்து ஜனநாயக கடமையாற்றினேன். பின் அன்னைக்கு மகனாக எனது கடமையை ஆற்றினேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 7ம் கட்ட வாக்குபதிவில் நடந்த பரபரப்பு சம்பவம்; குட்டையில் வீசப்பட்ட ஈவிஎம் மெஷின்.!