திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடிமேல் அடி.. காங்கிரசுக்கு இந்த மாநிலத்தில் வெற்றிவாய்ப்பே இல்லையாம் - கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்.!
2024 மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 04ம் தேதி வெளியாகிறது. ஏழு கட்ட தேர்தல்களும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று மாலை 06:30 மணிக்கு பின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இந்த கருத்துக்கணிப்புகளின்படி பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியில் அமரும் என கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி 150 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில், 42 லும் நாங்களே வெற்றிபெறுவோம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருந்தது.
இதையும் படிங்க: 7ம் கட்ட வாக்குபதிவில் நடந்த பரபரப்பு சம்பவம்; குட்டையில் வீசப்பட்ட ஈவிஎம் மெஷின்.!
மேற்குவங்கத்தில் வெற்றி வாய்ப்பு நிலவரம்
இந்நிலையில், மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் பாஜக 21 முதல் 24 வரை கைப்பற்றலாம், திரிணாமுல் காங்கிரஸ் 18 முதல் 21 தொகுதிகளை கைப்பற்றலாம். காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியை கூட கைப்பற்ற வாய்ப்பு இல்லை என கணிக்கப்பட்டு இருக்கிறது இது காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அளிக்கும்.
ஏற்கனவே தேத்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகுவதற்கு முன் 250 தொகுதிகளில் நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவோம். இந்தி (INDI Alliace) கூட்டணி ஆட்சி அமையும், காங்கிரஸ் ஆட்சி வழிநடத்தும் என காத்திருந்த நபர்களுக்கு தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள் அதிருப்தியை தந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்த சரிவுகள் தலைமைக்கு அடிமேல் இடியாக விழுகிறது.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளரை ஓடஓட விரட்டி கல்வீசி தாக்குதல்; மண்டை உடைப்பு., தலைதெறித்து ஓடிய அதிகாரிகள்.!!