மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு... தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி.!!
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமானவருடன் காதல்
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள தலகட்டா புரா பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சனா. 20 வயதான இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஸ்ரீகாந்த என்பவருடன் அஞ்சனாவிற்கு காதல் மலர்ந்திருக்கிறது. ஸ்ரீகாந்த அந்தக் கல்லூரியில் பகுதி நேரமாக படித்து வந்ததாக தெரிகிறது. மேலும் ஸ்ரீகாந்திற்கு ஏற்கனவே திருமணமான நிலையிலும் அஞ்சனா அவரை காதலித்து இருக்கிறார்.
பெற்றோர் எதிர்ப்பு
அஞ்சனா மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இது தொடர்பாக தங்களின் பெற்றோரிடம் தெரிவித்த போது இருவரது பெற்றோரும் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கள்ளக்காதல் ஜோடி மன வருத்தத்தில் இருந்துள்ளது. தங்களது பெற்றோர் இனியும் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என காதல் ஜோடி முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அஞ்சனா மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் ஜூலை ஒன்றாம் தேதி வீட்டில் இருந்து மாயமாகினர்.
இதையும் படிங்க: வாவ்... பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா? இஸ்ரோ தலைவரின் சுவாரசியமான பதில்.!!
காவல்துறை விசாரணை
அஞ்சனா மற்றும் ஸ்ரீகாந்த் இருவரையும் எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இது தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இந்நிலையில் பெங்களூரின் நைஸ் சாலையில் உள்ள ஏரி பகுதியில் கார் ஒன்று தனியாக நிற்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் காரை சோதனை இட்டபோது அதில் அஞ்சனா மற்றும் ஸ்ரீகாந்தின் செல்போன்கள் கிடைத்துள்ளது. இதனைக் கொண்டு ஸ்ரீகாந்த் மற்றும் அஞ்சனா ஜோடி தற்கொலை செய்து இருக்கலாம் என்ற அனுமானத்திற்கு காவல்துறை வந்தது.
தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஏரியில் தீவிரமான சோதனையில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு அஞ்சனா மற்றும் ஸ்ரீகாந்த் இருவரின் உடல்களும் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஏரியிலிருந்து மீட்கப்பட்டது. மேலும் அஞ்சனாவின் செல்போனில் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. தாங்கள் திருமணம் செய்து கொள்ள பெற்றோர் சம்பதிக்காததால் கைகளை கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்வதாக வீடியோ பதிவும் செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட உடல்களை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: சோகத்தின் உச்சம்... நூடுல்ஸ் ஆல் பறிபோன உயிர்.!! 8 வயது சிறுமி பரிதாப பலி.!!