வாவ்... பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா? இஸ்ரோ தலைவரின் சுவாரசியமான பதில்.!!



will-you-send-pm-modi-to-space-isro-chief-heartfelt-rep

இந்திய விண்வெளியின் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தற்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி விண்வெளிக்கு செல்வாரா.? என்பது குறித்து இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் அளித்திருக்கும் பேட்டி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது .

இஸ்ரோவின் சுகன்யான் சோதனை

விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி அதில் வெற்றி கண்ட இந்தியாவின் இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனம் தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்தினை அடுத்த வருடம் செயல்படுத்த இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்காக இந்திய விண்வெளி வீரர்களான அஜித் கிருஷ்ணன், பிரசாந்த் நாயர் மற்றும் சுபான்சு சுக்லா ஆகியோர் விண்வெளிக்கு செல்வதற்கு தயாராகி வருகின்றனர். முதல்முறையாக மனிதர்களை அனுப்பி சோதனை செய்ய இருப்பதால் இந்தப் பயணத்திற்கு பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களை மட்டும் அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

India

இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

இந்த சோதனை முயற்சி குறித்து இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்ய இருக்கிறது. இது சோதனை முயற்சியாக இருப்பதால் விஐபிகள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களை அனுப்ப முடியாது. அதனால் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களை அனுப்ப முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தத் திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் கொடூரம்... கன்று குட்டிக்கு பாலியல் வன்புணர்வு.!! இளைஞரை கைது செய்த காவல்துறை.!!

விண்வெளிக்கு செல்வாரா பிரதமர் மோடி

இந்நிலையில் பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா.? என நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சோம்நாத்திடம் கேட்டார். இதற்கு பதிலளித்த சோமநாத், பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவது எனக்கு மட்டும் பெருமை அல்ல அது நாட்டிற்கே பெருமை. எனினும் தற்போது சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த சோதனை வெற்றி பெற்று பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று உறுதி செய்த பின்னர் நாட்டின் பிரதமர் போன்றவர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என தெரிவித்துள்ளார் .

இதையும் படிங்க: #Breaking: மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர் அமளி; அவை அடுத்தடுத்து ஒத்திவைப்பு.!