பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகை காஜல் அகர்வால் என்ன சொல்லிருக்கார் பாருங்க.
அட கொடுமையே... நிச்சயித்த பெண் கூட்டு பலாத்காரம்.!! மாப்பிள்ளை கண் முன் நடந்த கொடூரம்.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் வருங்கால கணவரின் முன் இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 8 நபர்களை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிச்சயதார்த்தம்
உத்திரபிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருக்கிறது. இரு குடும்பத்தினரும் கலந்து கொண்ட நிச்சயதார்த்த விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
கூட்டு பாலியல் வன்புணர்வு
நிச்சயதார்த்தம் நடந்ததையடுத்து அப்பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றில் இளம் பெண் தனது வருங்கால கணவருடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அந்தப் பெண்ணின் வருங்கால கணவர் கண்முன்னே அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: "9 வருஷமாச்சு ஒரு புழு, பூச்சி இல்ல..." குழந்தை இல்லாததால் ஆத்திரம்.!! இளம் பெண் படுகொலை.!! மாமியார் கைது.!!
8 பேர் கைது
இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணும் அவரது வருங்கால கணவரும் காவல்துறையில் புகாரளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் இளம்பெண் கொடுத்த அடையாளங்களின் அடிப்படையில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை உபி காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "ஐயோ கடிச்சிட்டானே..." கள்ளக்காதலனின் மர்ம உறுப்பை கடித்து குதறிய கணவன்.!! உபியில் வினோத சம்பவம்.!!