"9 வருஷமாச்சு ஒரு புழு, பூச்சி இல்ல..." குழந்தை இல்லாததால் ஆத்திரம்.!! இளம் பெண் படுகொலை.!! மாமியார் கைது.!!



woman-murdered-by-husband-and-mother-in-law-for-not-get

திருமணமாகி 9 வருடங்களாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் கணவன் மற்றும் மாமியார் சேர்ந்து இளம் பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின் மாமியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கணவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காதல் திருமணம்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோகித். இவர் ஷிவானி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் வருடம் இவர்களது திருமணம் பெற்றோர் சம்பந்தத்துடன் நடைபெற்றது. ஷிவானி தனது மாமியார் புஷ்பா மற்றும் கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் குடும்பத்தில் பிரச்சனை வர தொடங்கியது.

India

குழந்தை இல்லாததால் கொடுமை

ஷிவானியின் கணவர் ரோகித் மற்றும் மாமியார் புஷ்பா ஆகியோர் 9 வருடங்களாகியும் குழந்தை இல்லை என்பதை கூறி கொடுமை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஷிவானி தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தார் காவல்துறையிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஷிவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதையும் படிங்க: "ஐயோ கடிச்சிட்டானே..." கள்ளக்காதலனின் மர்ம உறுப்பை கடித்து குதறிய கணவன்.!! உபியில் வினோத சம்பவம்.!!

மகளை கொலை செய்ததாக புகார்

இந்நிலையில் தனது மகளுக்கு குழந்தை இல்லாததால் அவரது மாமியார் மற்றும் கணவர் சேர்ந்து கொலை செய்ததாக ஷிவானியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை செய்ததில் ஷிவானி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரது மாமியார் புஷ்பாவை கைது செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாகி இருக்கும் கணவரை தேடி வருகின்றனர். குழந்தை இல்லாததால் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் பரபரப்பு... 5 வயது சிறுமி கடத்தி கொலை.!! கொலையாளி என்கவுன்டர்.!